×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், ஏப்.23: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நியாய விலை கடை விற்பனையாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். அதில், மாவட்ட செயலாளர் லெனின், நிர்வாகிகள் பரமசிவம், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40% மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். டிஎன்சிஎஸ்சி எடை தராசும் அலுவலக கணினியோடு இணைத்து ரசிது வழங்கிய பின்பு தான் நியாய விலை கடை எடை தராசை விற்பனை நிலையத்துடன் இணைக்கப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனி துறை உருவாக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும்.

பள்ளித் தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல் வேண்டும் ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைத்து ஒன்பதாவது மாநில ஊதிய மாற்ற குழுவுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 30 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் மேலும் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும் என மூன்று நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் முதல் நாள் போராட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் எங்களின் கோரிக்கைகளை உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்து அதிகாரிகள் பேசக்கூடாது தமிழக அரசு நேரடியாக பேச வேண்டும் என வலியுறுத்தி பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Fair Price Shop ,Jayankondam ,Fair Price Shop Vendors Association ,Jayankondam, Ariyalur district ,Tamil Nadu Government Fair Price Shop Workers Association District ,President ,Aranganathan ,Tamil Nadu… ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்