- அங்கன்வாடி
- காரியாபட்டி பேரூராட்சி
- அமைச்சர்
- தங்கம் தென்னராசு
- Kariyapatti
- நிதி அமைச்சர்
- கரிசல்குளம்
- சேவல்பட்டி
- தின மலர்
காரியாபட்டி, ஏப்.23: காரியாபட்டி பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். காரியாபட்டி பேரூராட்சி சார்பில் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் கரிசல்குளம் மற்றும் செவல்பட்டியில் தலா ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டது. இந்த புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
மேலும் காரியாபட்டி அச்சம்பட்டியில் அதிகமான குடியிருப்புக்கள் இருப்பதால் இந்த பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை அமைக்க மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அமைச்சரின் உத்தரவின் பேரில் அச்சம்பட்டி யூனியன் அலுவலக சாலையில் அமைக்கப்பட்ட பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விழாவில் பேரூராட்சி துணை தலைவர் ரூபி, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ் வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி சங்கர பாண்டியன், தங்கப்பாண்டியன், கல்யாணி, முத்துவீரன். பேரூராட்சி கவுன்சிலர் கள் செல்வராஜ், முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், முத்துக்குமார், தீபா நாகஜோதி, சரஸ்வதி , உட்பட பலர். பங்கேற் றனர்.
The post காரியாபட்டி பேரூராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடங்கள்: அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

