- சந்தனகுடு திருவிழா
- எர்வாடி
- தர்ஹா
- இப்ராஹிம் ஷஹீத் ஓலுல்லா
- மஹன் குத்புல் அக்தப் சுல்தான்
- எர்வாடி தர்ஹா
- இதர்ஹா
- சமய நல்லிணக்கத்திற்கான சந்தனகுட விழா
- சனநகுடா
- சந்தனக்கு திருவிழா
- ஏர்வாடி தர்ஹா
கீழக்கரை, ஏப்.23: ஏர்வாடி தர்ஹாவில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடங்கப் பெற்றுள்ளார். இத்தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 851ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா நடப்பாண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.29ம் தேதி தொடங்குகிறது. இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மே 9ம் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு மத நல்லிணக்க விழா மே 21ம் தேதி மாலை தொடங்கி, மே 22ம் தேதி அதிகாலை மேளதாளம் முழங்க, யானைகள் அணிவகுக்க, குதிரைகள் நாட்டிய மாட, ரதம் பவனி வர, அனைத்து சமுதாயத் தினரும் அணிவகுக்க, புனித மக்பராவில் சந்தனம் பூசப்படும். தொடர்ந்து மே 28ம் தேதி அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். இதனை தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் (நெய் சோறு) வழங்கப்படும்.
The post ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு விழா: மே 9ல் கொடியேற்றம் appeared first on Dinakaran.
