×

வேடசந்தூர் அருகே முதிய தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது

வேடசந்தூர், ஏப். 23: வேடசந்தூர் அருகே மாரம்பாடி ஊராட்சி கணக்கனூரை சேர்ந்த தம்பதி வேளாங்கண்ணி ஆரோக்கியம் (70), கேத்தரின்மேரி (64). கடந்த ஏப்.19ம் தேதி இரவு இவர்கள் இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அதன்பின் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கட்டையால் வேளாங்கண்ணி ஆரோக்கியத்தை தாக்கி, கேத்தரின்மேரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர். அப்போது தடுக்க முயன்ற கேத்தரின் மேரியை கத்தியால் கீறிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின் மேரியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் தங்க செயினை பறித்ததில் ஒருவர் கேத்தரின் மேரி சகோதரியின் பேரன் அருண்குமார் (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையில் பாசித் ரகுமான், பாலாஜி, பாஸ்கரன், நாகராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான வேடசந்தூர் அருகே உண்டார்பட்டி மேட்டூர் பகுதியை சேர்ந்த பிரபு (25) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து தங்க செயினை பறிமுதல் செய்தனர்.

The post வேடசந்தூர் அருகே முதிய தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vedasanthur ,Velankanni Arogyayam ,Catherine Mary ,Marambadi Panchayat ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்