×

ஐபிஎல் போட்டியில் இன்று மும்பையுடன் மல்லுக்கட்டு சன்ரைசர்சுக்கு ஜல்லிக்கட்டு

* ஐதராபாத்தில் இன்று நடக்கும் 41வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
* இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் இரு அணிகளு்ம 24 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் மும்பை 14, ஐதராபாத் 10 போட்டிகளில் வென்றுள்ளன.
* இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ஐதராபாத் 277 ரன் விளாசியுள்ளது. அதுதான் ஐபிஎல் போட்டியில் ஒரு அணி எடுத்த 3வது அதிகபட்ச ரன். மும்பை அதிகபட்சமாக 246 ரன் வெளுத்துள்ளது.
* குறைந்தபட்சமாக ஐதராபாத் 96, மும்பை 87 ரன் எடுத்துள்ளன.
* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் மும்பை 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
* நடப்புத் தொடரில் சில நாட்களுக்கு முன்பு மோதிய 33வது லீக் போட்டியில் மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
* நடப்புத் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் 7 லீக் போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வென்றுள்ளது.
* ஹர்திக் பாண்ட்யா வழி காட்டுதலில் மும்பை 8 போட்டிகளில் ஆடி 4ல் வென்றுள்ளது.
* இன்றைய ஆட்டம் ஐதராபாத்துக்கு 8வது, மும்பைக்கு 9வது லீக் போட்டியாகும்.
* ஐதராபாத் அரங்கில் இரு அணிகளும் மோதிய 9 போட்டிகளில் சன்ரைசர்ஸ் 5-4 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

* மீண்டும் மீண்டும் காயம் சஞ்சு சாம்சன் சோகம்
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக முதல் மூன்று போட்டிகளில் அவர் கேப்டனாக செயல்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதில் ரியான் பராக், முதல் 3 போட்டிகளுக்கு கேப்டனாக செயலாற்றினார். இந்நிலையில் தற்போது சஞ்சு சாம்சனுக்கு, கடைசியாக ஆடிய போட்டியின்போது வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் தக்க சிகிச்சை அளித்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால், பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ள, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான போட்டியில் அவர் ஆட மாட்டார் எனக் கூறப்படுகிறது. வழக்கம் போல, அந்த போட்டிக்கும் ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

The post ஐபிஎல் போட்டியில் இன்று மும்பையுடன் மல்லுக்கட்டு சன்ரைசர்சுக்கு ஜல்லிக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Sunrisers Hyderabad ,Mumbai ,IPL ,Mumbai Indians ,Hyderabad ,Sunrisers Hyderabad and ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...