×

தங்கை இறந்த துக்கத்தில் அண்ணன் தற்கொலை

நெல்லை, ஏப்.22: வி.கே.புரம் அருகே வேம்பையாபுரத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவி பத்மாராணி (36). இவர் குடும்ப தகராறில் கடந்த 14ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கை இறந்த சோகத்தில் இருந்த அவரது சகோதரர் துரை (52) என்பவர் தங்கையின் இறுதிச்சடங்கு முடிந்த மறுநாள் 15ம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மில்கேட் அடிவாரத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் துரை உயிரிழந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கை இறந்த சோகத்தில் அண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விகேபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post தங்கை இறந்த துக்கத்தில் அண்ணன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Padmarani ,Arumugam ,Vempaiyapuram ,V.K. Puram ,Durai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை