×

கார் மீது டிராக்டர் மோதியதில் சப் கலெக்டர் பலி

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார். பின்னர் நாமக்கல் மாவட்டம், மோகனூர் அரசு சர்க்கரை ஆலை சப் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த பிப். 5ம் தேதி இரவு காரில் மதுரை வந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மினுக்கம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த சப் கலெக்டர் சிவக்குமார், கார் கண்ணாடியை உடைத்து மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இரண்டரை மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவக்குமார் நேற்று அதிகாலை இறந்தார்.

The post கார் மீது டிராக்டர் மோதியதில் சப் கலெக்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sivakumar ,Periya Urseri ,Alanganallur ,Revenue Divisional Officer ,Palani, Dindigul district ,Mohanur Government Sugar Mill ,Namakkal district ,Dinakaran ,
× RELATED ஆங்கில புத்தாண்டு...