×

நீடாமங்கலம் அருகே ராயபுரத்தில் வேளாண் மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே ராயபுரத்தில், திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் கல்லூரி மாணவிகள் ராயபுரம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையில் பயிற்சி நடைபெற்றது.

இயற்கையான முறையில் கத்தரி, மிளகாய், வெள்ளரி சாகுபடி செய்யப்படுவதை, மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண்மை பண்ணை உரிமையாளர் எடுத்துரைத்தார் . மேலும் மீன் குட்டை அமைத்து மீன் பண்ணையுடன் சேர்ந்து ஆடு மாடு மற்றும் கோழி பண்ணைகளை பார்வையுட்டனர். இங்கு இயற்கையான முறையில் விவசாயத்தில் விளையும் வெள்ளரிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

The post நீடாமங்கலம் அருகே ராயபுரத்தில் வேளாண் மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Rayapuram ,Needamangalam ,Trichy Agricultural College ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...