×

பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி,ஏப்.22: பொன்னமராவதியில் உள்ள ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மஹாருத்ரஹோமம், அபிஷேகம், சிறப்பு யாகம், வெள்ளி அங்கி சாத்துதல், தீபாராதனை நடைபெற்றது. வடை மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், விழாக்குழு நிர்வாகிகள் சேதுபதி, பாஸ்கர், குமரன், தியாகு உட்பட பலர் கலந்துகொண்டனர். அதேபோல, பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை வழிபாடு நடைபெற்றது.

The post பொன்னமராவதி சோழீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Theipirai Ashtami ,Ponnamaravathi Choleswarar Temple ,Ponnamaravathi ,Avudayanayaki Sametha Choleswarar Temple ,Kala Bhairava ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்