கீழ்வேளூர், ஏப். 22: நாகப்பட்டினம் மாவட்டம் நாகை தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாகையை அடுத்த பாப்பா கோயிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் பிச்சை வரவேற்றார். மாநில மீனவர் அலை துணைச் செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, நாகை மாவட்ட தி.மு.க. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் பங்கேற்றனர்.முன்னாள் அமைச்சர் மதிவாணன், மாநில விவசாய அணி துணை செயலாளரும், கீழ்வேளூர் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க முற்படும் ஒன்றிய மோடி அரசை வன்மையாக கண்டிப்பதோடு, தமிழ்நாடு வெல்லும் என திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், செவிசாய்க்காத ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கையை புறக்கணித்து, ஹிந்தி திணிப்பை ஏற்படுத்தி மும்மொழிக்கொள்கையை பின்பற்ற துடிப்பதோடு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை பா.ஜ.க. அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வது என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மசோதாவை நிராகரித்த ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று, தமிழ்நாட்டின் நியாயத்தை எடுத்துக் கூறியதையடுத்து,
உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கி, இந்தியாவின் வரலாற்று தீர்ப்பைப் பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வது. 2026 சட்ட மன்ற தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள தி.மு.க. 200க்கும் மேற்பட்ட தொகுதியில் வெல்வது என்ற இலக்கை எட்டும் வகையில் திமுக வினர், தகவல் தொழில் நுட்ப அணியினர் இன்றே தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பொது மக்களிடத்தில் பிரச்சாரம் செய் திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் உதயகுமார், பாரியாலன், பாலமுரளி, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மோகன் தாஸ், ஒன்றிய நிர்வாகிகள் சீனிவாசன், திருநாவுகரசு, நாகேஸ்வரி, காமராஜ், தமிழ்செல்லம். மற்றும் மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள்,கிளை செயலாளர்கள், மாவட்டஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.
The post பாப்பாகோயிலில் நாகை தெற்கு ஒன்றிய திமுக கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.
