×

பஹ்ரைனில் இறந்த மீனவரின் உடலை கொண்டு வரவேண்டும்: கலெக்டரிடம் குடும்பத்தினர் கோரிக்கை

ராமநாதபுரம், ஏப்.22: பஹ்ரைன் நாட்டிற்கு மீன் பிடிக்கச் சென்று, இறந்த மீனவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர குடும்பத்தினர், மீனவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் பாம்பன் பகுதி மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, பாம்பன் காமராஜர் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த சூசை மரியான் மகன் சிமோன்சன்(33) கடந்த மாதம் பஹ்ரைன் நாட்டிற்கு மீன்பிடி தொழில் செய்ய சென்றுள்ளார். கடலுக்கு சென்று மீன் பிடித்து தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், ஏப்.20ம் தேதி படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக, சக மீனவர்கள் சிமோன்சன் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தனர்.

குடும்பத்திற்கு ஒரே மகனான இவருக்கு வயதான தாய், தகப்பனார். செல்சியா என்ற மனைவியும், ஜெய்ரோ(3), ரெகான் (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். அவரின் உடலை சொந்த ஊர் கொண்டு வருவதற்கு ராமநாதபுரம் கலெக்டர், ஒன்றிய, மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிமோன்சன் வேலை பார்த்த பஹ்ரைன் கம்பெனியிடம் இருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும், குடும்ப சூழ்நிலை கருதி ஒன்றிய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பஹ்ரைனில் இறந்த மீனவரின் உடலை கொண்டு வரவேண்டும்: கலெக்டரிடம் குடும்பத்தினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bahrain ,Ramanathapuram ,People's Day ,Ramanathapuram Collector's Office ,Collector ,Simran ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை