×

தேர்த்திருவிழா முன்னேற்பாடு தீவிரம்

ராசிபுரம், ஏப்.22: ராசிபுரம் அருகே அத்தனூர் அம்மன் கோயில் பழமை வாய்ந்த கோயிலாகும். இக்கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனையடுத்து சித்திரை திருவிழாவிற்கான பூச்சாட்டு விழா, நேற்று முன்தினம் நடைபெற்றது. தினம்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில், சுவாமி வாகனத்தில் கோயிலை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வரும் திங்கட்கிழமை நடைபெறுகிறது. இந்த ஆண்டு புதிதாக தேர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதனை கோயில் கட்டளைதாரர்கள் நேரில் சென்று இதனை ஆய்வு செய்தனர்.

The post தேர்த்திருவிழா முன்னேற்பாடு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : festival ,Rasipuram ,Attanur Amman Temple ,Chithirai festival ,Swami ,
× RELATED பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் காயம்