×

பூதப்பாண்டியில் கடன் தொல்லையால் கொத்தனார் தற்கொலை

பூதப்பாண்டி, ஏப்.22: பூதப்பாண்டி காந்திஜி நகரை சேர்ந்தவர் ராயப்பன் (62). கொத்தனார். அவரது மனைவி மல்லிகா (54). ராயப்பன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்தபோது சங்கரன் என்பவரிடம் கடன் வாங்கினாராம். பின்னர் இந்த கடனை உரிய நேரத்தில் திருப்பி கொடுக்க முடியாமல் போனதால் இதுகுறித்து கடன் கொடுத்தவர் தரப்பில் தக்கலை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதையடுத்து எப்போது கடனை அடைக்கி போகிறேனோ என்று ராயப்பன் மனவருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராயப்பன் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து மல்லிகா அளித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூதப்பாண்டியில் கடன் தொல்லையால் கொத்தனார் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Bricklayer ,Bhutapandi ,Rayappan ,Gandhiji Nagar, Bhutapandi ,Mallika ,Sankaran ,Dinakaran ,
× RELATED முசிறி அருகே 30 குரல்களில் மிமிக்கிரி செய்து அசத்திய அரசு பள்ளி மாணவி