×

அதிமுக-பாஜ கூட்டணி விவகாரம் இன்னைக்கு லீவு நோ கொஸ்டின்: ஓபிஎஸ் எஸ்கேப்

கோவை: அதிமுக-பாஜ கூட்டனி குறித்து கேள்விக்கு இன்னைக்கு லீவு…நோ கொஸ்டின் என்று கூறி ஓபிஎஸ் புறப்பட்டு சென்றார். கோவை கணபதி அருகே உள்ள ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆண்டுதோறும் புத்துணர்வு சிகிச்சை எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். அதன்படி, அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். பின்னர், ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து நேற்று மதியம் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் கார் மூலமாக புறப்பட்டு சென்றார். இதற்கு முன்னதாக கோவையை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர். பின்னர், ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், செய்தியாளர்கள் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ், ‘கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று விடுமுறை. அனைவருக்கும் புனித வெள்ளி வாழ்த்துகள்’ என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

The post அதிமுக-பாஜ கூட்டணி விவகாரம் இன்னைக்கு லீவு நோ கொஸ்டின்: ஓபிஎஸ் எஸ்கேப் appeared first on Dinakaran.

Tags : At-Mugha-Baja Alliance ,OPS ,Govai ,Adimug-Baja Gouttani ,Leivu ,Former ,Chief Minister ,O. Paneer Selvam ,Atimuga-Baja Alliance ,OPS Escape ,
× RELATED சொல்லிட்டாங்க…