×

திருவாரூரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,ஏப்.18: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயதில் ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகித கூடுதல் ஓய்வூதம் வழங்கிட வேண்டும், சத்துணவு,அங்கன்வாடி,ஊராட்சி செயலாளர்கள்,ஊர்புற காவலர்கள்,வன காவலர்கள்,பட்டு வளர்ச்சி ஊழியர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும், காப்பீடு திட்ட நீண்ட கால குறைபாடுகளை நீக்கிட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும், மருத்துவபடியாக மாதந்தோறும் ரூ ஆயிரம் வழங்கிட வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியினை ரூ 2 லட்சமாக உயர்த்திட வேண்டும்,

குடும்ப ஓய்வூதியர்களுக்கும் குடும்ப பாதுகாப்பு திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும், ஓய்வூதியர் நலவாரியம் அமைத்திட வேண்டும், மாவட்டம்தோறும் பாதுகாப்பு இல்லங்கள் உருவாக்கிட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் சத்தியமூர்த்தி, சுவாமிநாதன், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Pensioners Association ,Thiruvarur ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்