×

மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராதாபுரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு

ராதாபுரம்,ஏப்.18: கோடையின் கடும் வெப்பத்தை சமாளிக்க ராதாபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலின் திறப்பு விழா நடந்தது. முன்னாள் மாவட்டச் செயலாளர் நாராயண பெருமாள் தலைமையில் நடந்த இவ்விழாவில் பங்கேற்ற முன்னாள் எம்பி சவுந்தர்ராஜன் நீர் மோர் பந்தலை திறந்துவைத்தார். இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அந்தோனி அமலராஜா, சவுந்தரபாண்டியபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரிச்சர்ட், லாரன்ஸ், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி, செய்யது, பால்துரை, துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராதாபுரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK West Union ,Radhapuram ,Radhapuram West Union AIADMK ,Former ,District Secretary ,Narayana Perumal ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை