- காரைக்குடி
- நிலையம்
- தெற்கு ரயில்வே
- பொது மேலாளர்
- சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி
- ஜனாதிபதி
- சாமி திராவிடமணி
- காரைக்குடி ரயில் நிலையம்
- தின மலர்
காரைக்குடி,ஏப்.17: காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதலாக பிளாட்பாரம் அமைக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு தொழில் வணிகக்கழகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழில் வணிக்கழக தலைவர் சாமி திராவிடமணி கூறுகையில், காரைக்குடி ரயில் நிலையம் பி கிரேடு தகுதியில் உள்ளது/ இங்கு ஏற்கவே 5 பிளாட்பாரம்கள் உள்ளன. தவிர பழைய நடைமேடை பாலத்திற்கு லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நெடுதூர ரயில்கள், சென்னை, நெல்லை, செங்கோட்டை, ஹூப்ளி, எர்ணாகுளம் போன்ற ஊர்களுக்கும், ராமேஸ்வரம், திருவாரூர், திருச்சி பகுதிகளுக்கும் 40க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகிறது.
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரயில்வே ஸ்டேசனில் உள்ள கிழக்கு, மேற்கு பகுதியில் காலியாக உள்ள இடம் உள்ளது. அங்கு திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உள்ளது போன்று, மேற்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் புதிய பிளாட்பார்ம் (ஒன் ஏ), கிழக்கு பகுதியில் காலியாக உள்ள இடத்தில் பிட்லைன் பாதை (இணைப்பு பாதை) அமைக்கலாம். தவிர கூடுதலாக 6வது பிளாட்பார்ம் அமைத்தால் இரவு முழுவதும் நிறுத்தப்படும் ரயில், அதிகாலையில் புறப்படும் விரைவு ரயில் மற்றும் பகலில் நிறுத்தப்படும் ரயில்களை அங்கு நிறுத்தி கொள்ள வசதியாக அமையும் என மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
The post காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
