- அப்பனூர் அம்மன் கோயில்.
- சாயல்குடி
- ஆப்பனூர் அரியநாச்சி அம்மன் கோவில்
- கடலாடி
- பிடாரியேந்தல் கிராமம்
- ஆப்பனூர்
- அம்மன்
- கோவில்
சாயல்குடி, ஏப்.17:கடலாடி அருகே ஆப்பனூர் அரியநாச்சி அம்மன் கோயிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து 34 குத்துவிளக்கு உள்பட பித்தளை பாத்திரங்களை திருடி சென்றனர். கடலாடி அடுத்துள்ள பிடாரியேந்தல் கிராமத்தில் உள்ள ஆப்பனூர் அரியநாச்சி அம்மன் கோயில் 448 கிராம மக்களின் முதன்மை தெய்வமாக உள்ளது. இங்கு ஒரு மாத காலம் நடைபெறும் முள்ளிநடுதல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோயிலில் கடந்த 14ம் தேதி இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 34 குத்துவிளக்கு, 2 பித்தளை அண்டா, 2 பித்தளைக் குடம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் கோயிலை திறக்கச் சென்ற பூசாரி காளியப்பன், கோயில் பூட்டு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து கோயில் உள்ளே சென்று பார்த்த போது குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேரையூர் காவல் நிலையத்தில் பூசாரி காளியப்பன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post ஆப்பனூர் அம்மன் கோயிலில் 34 குத்து விளக்கு திருட்டு appeared first on Dinakaran.
