- காங்கிரஸ்
- யூனியன் அரசு
- திண்டுக்கல், அய்யலூர்
- திண்டுக்கல்
- வேடசந்தூர்
- அமலாக்க இயக்குநரகம்
- இந்திய தேசிய காங்கிரஸ் குழு
- தேசிய பொதுச் செயலாளர்
- சோனியா காந்தி
- எதிர்க்கட்சி தலைவர்
- ராகுல் காந்தி
- தேசிய ஹெரால்டு
- தின மலர்
திண்டுக்கல்/ வேடசந்தூர், ஏப். 17: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூலம் ஊழல் செய்ததாக இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய பொது செயலாளர் சோனியா காந்தி மீதும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாவட்ட மாநகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். அய்யலூர் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். நகர தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார்
The post திண்டுக்கல், அய்யலூரில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
