×

பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்: பொதுமக்களிடம் இருந்து 44 மனுக்கள் பெறப்பட்டன

பெரம்பலூர், ஏப்.17: பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்ற சிறப்பு மனுக்கள் முகாம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று காலை 11மணி அளவில், மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார். இந்த சிறப்பு மனுமுகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி பாலமுருகன், பெரம்பலூர், பாடாலூர், குன்னம், அரும்பாவூர், மங்கலமேடு, கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், பெரம்பலூர், மங்கலமேடு மற்றும், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவு காவல் துறைகளைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 44 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். பொதுமக்கள் இந்த சிறப்புமனு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட எஸ்பிஅலுவலகம் வருவதற்கு ஏதுவாக மாவட்ட காவல்துறை சார்பில் பாலக்கரையிலிருந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும், மீண்டும் எஸ்பி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது என்பதை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்: பொதுமக்களிடம் இருந்து 44 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Special Contamination Camp ,Perambalur ,PERAMBALUR, AP.17 ,SPECIAL PETITIONS CAMP ,PERAMBALUR DISTRICT POLICE ,SP ,Adarsh Pasera ,Perambalur District SP ,Special Victim Camp ,Dinakaran ,
× RELATED காவல்துறை எச்சரிக்கை எறையூர்...