×

ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி

ஜெயங்கொண்டம், ஏப்.17: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆபத்துகாத்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கங்கைகொண்டசோழபுரம் கணக்க விநாயகர் கோயில் மற்றும் ஜெயங்கொண்டம் ஆபத்து காத்து விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் , பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருகம்புல் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் மேல குடியிருப்பு சின்ன வளையம் செங்குந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post ஜெயங்கொண்டம் ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி appeared first on Dinakaran.

Tags : Sangadahara Chaturthi ,Jayankondam ,Dattathu Kathu Vinayagar Temple ,Ganesha ,Jayankondam, Ariyalur district ,Ganesha temple ,Gangaikondacholapuram ,Ganesha… ,Sangadahara ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்