- Thirunavukkaras
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- மகாதேவன்
- சென்னை
- மா. அரங்கநாதன்
- மா. அரங்கநாதன் இலக்கியவாதி
- முன்ருல் இலக்கிய அமைப்பு

சென்னை: இலக்கிய உலகின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர் மா.அரங்கநாதன். அவரின் நினைவாக 2018ம் ஆண்டு முதல் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கிய துறையில் பல்லாண்டுகளாக பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது பேராசிரியர் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமை வகித்து விருதுகளை வழங்கினார்.
மேலும் மா.அரங்கநாதன் மற்றும் முன்றில் வலை தளங்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசுகையில், விருது பெற்ற இருவரும் எழுத்தாளர் மா.அரங்கநாதன் உடன் தொடர்பில் இருந்தவர்கள். புலம்பெயர்ந்தவர்கள் படைப்புகளை பதிப்பித்து கொடுத்தவர் திருநாவுக்கரசு. தமிழ் திரைப்படத்தில் ராகங்கள் எப்படி அமைந்து இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி காட்டியவர் அவர். சங்க இலக்கியங்களை உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கோட்பாடுகளை வெளிக்காட்டியவர் பேராசிரியர் தமிழவன் என்றார்.
The post தமிழவன், திருநாவுக்கரசுக்கு அரங்கநாதன் இலக்கிய விருது: உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் வழங்கினார் appeared first on Dinakaran.
