- பாஜக கூட்டணி...
- செலூர் ராஜு
- மதுரை
- அய்யாட்மக்-
- பி.ஜே.பி கூட்டணி
- முன்னாள் அமைச்சர்
- பெத்தானியபுரம்
- மதுரை…
மதுரை: அதிமுக – பாஜ கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு, 15 நாட்கள் கழித்து பதில் சொல்வதாக செல்லூர் ராஜூ கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் ரூ.72 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகளுக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அடிக்கல் நாட்டினார். பணிகள் குறித்து பேசியவர், திடீரென, ‘வணக்கம்… நன்றி’ என்றபடி எழுந்தார்.
அவரிடம், நிருபர்கள், பாஜவுடன் அதிமுக கூட்டணி, மாநில தலைவர் மாற்றம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பாஜ விமர்சன பேச்சு தொடர்பாக தொடர் கேள்விகளை கேட்டனர்.
இதனால் மிரண்டு போன செல்லூர் ராஜூ, ‘‘அதிமுக – பாஜ கூட்டணி அரசியல் கேள்விகளுக்கு 15 நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன். பொறுத்துக்குங்க. உறுதியாக உங்களிடம் சொல்கிறேன். அரசியல் கருத்துகளை சொல்லும்போது கட்டாயம் சொல்வேன்’’ என்றபடி கிளம்பிச் சென்றார். பாஜ குறித்தும், அண்ணாமலை குறித்தும், கடந்த சில மாதங்களாக கடும் விமர்சனத்தை முன் வைத்தார் செல்லூர் ராஜூ. ஆனால், திடீரென பின்வாங்கியதற்கான காரணம் தலைமையின் தடையுத்தரவா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post ‘பாஜ கூட்டணி…? கொஞ்சம் பொறுங்க…’‘15 நாள் கழிச்சு பதில் சொல்றேன்…’ செல்லூர் ராஜூ திடீர் சைலண்ட் மோட் appeared first on Dinakaran.
