×

மிக்சியில் அரைத்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

திருவாரூர்: திருவாரூர் தாலுகா பின்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் அழகு திருநாவுக்கரசு (35). விவசாயி. இவரது மனைவி சிந்து பைரவி (28). இரண்டரை வயதில் ஆண் குழந்தையும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வீட்டில் இருந்து வரும் டேபிள் பேன் ஒன்றுக்கு ஒயர் பற்றாக்குறை காரணமாக மற்றொரு ஒயரினை இணைத்து பயன்படுத்தியுள்ளனர்.

ஒயர்கள் இணைக்கப்பட்ட இடத்தில் டேப்ரோல் சுற்றாமல் சாதாரணமாக ஒயர் இணைக்கப்பட்டு வீட்டின் தரையில் இருந்துள்ளது. நேற்று 7 மாத பெண் குழந்தைக்கு உணவு ஊட்டுவதற்காக வீட்டில் மிக்சியில் சாதத்தை அரைத்து எடுத்து சென்றபோது, சிந்து பைரவி தவறுதலாக ஒயர் இணைப்பில் காலை வைத்துவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி சிந்து பைரவி உயிரிழந்தார்.

The post மிக்சியில் அரைத்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Azhughu Thirunavukkarasu ,Pinnavasal ,Thiruvarur taluka ,Sindhu Bhairavi ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்