- நைனார் நாகேந்திரன்
- டி.டிவி தீனகரன்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- தூத்துக்குடி
- சென்னை விமான நிலையம்
- அஇஅதிமுக
- திமுக
- TTV
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி. பாஜ, அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதால், திமுகவின் வெற்றி உறுதியாகிவிட்டது என்று அவர்கள் தரப்பில் கூறலாம். ஆனால் அவர்களால் அதை இறுதியாக கூற முடியாது. இறுதியாக கூற வேண்டியது வாக்காளர்களாகிய எஜமானார்கள் தான். பாஜவுடன் சேர்ந்ததால் தான் திமுக 1999ல் வெற்றி பெற்றது.
பாஜவுடன் நெருக்கமாக இருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஓரம்கட்டப்படவில்லை. எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசவே உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். எனவே மற்றவர்களை கூப்பிடவில்லை. திமுகவுடன் பாஜ மறைமுக கூட்டணி என்று விஜய் எப்படி கூற முடியும்? விஜய் அவ்வாறு கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பொறுப்பில் உள்ளவர் ஒரு விஷயத்தை சொன்னால், மக்கள் நம்பும்படி இருந்தால் தான், அதை ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
The post நயினார் நாகேந்திரன் பேட்டி ஓபிஎஸ், டிடிவி தினகரனை ஓரங்கட்டவில்லை appeared first on Dinakaran.
