×

கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

கோவை: கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார். கோவை கிராஸ் கட் சாலை கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூடத்தில் போதகராக இருக்கும் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 21-ல் கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார், மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கோவையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்ட மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது appeared first on Dinakaran.

Tags : John Jebaraj ,Goa ,Goa Cross Cut Road King ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி