- காம்ப்லிட்டா தைச்சுடன்
- சைதான் கூட்டணி
- நல்லார்
- கூட்டணி
- திண்டுக்கல்
- ஆதிமுக பூத் குழு
- அமைப்பு
- திண்டுக்கல் சீனிவாசன்
- ஆதிமுகா
- பாஜா கூட்டணி
- எடப்பாடி பழனிசாமி
- தேசிய ஜனநாயக கூட்டணி
- பாஜா நல்ல கூட்டணி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிமுக பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: அதிமுக, பாஜ கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் செயல்படுவார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கூட்டணி ஆட்சி என்று அவர் கூறவில்லை. முன்பு பாஜ கூட்டணியை நான் சைத்தான் கூட்டணி என கூறியது, அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்தது. அரசியல்வாதிகள் சூழ்நிலைக்கேற்ப பேசுவார்கள். இன்றைக்கு இருக்கிற சூழ்நிலை இதுதான் எங்கள் சூழ்நிலை. போனதடவ பேசுனது, முந்தி பேசுனது எல்லாத்தையும் கம்பிளீட்டா துடைச்சுடணும். கம்பிளீட்டா காலி பண்ணிடுங்க.
இப்போ இருக்கிறதுதான் உண்மையான நிலை. தற்போது நல்ல நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இதில் சந்தேகம் இல்லை. வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்து ஓட்டளித்துள்ளது. எடப்பாடி சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார். செங்கோட்டையன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தது அவருடைய சொந்த பிரச்னையாக கூட இருக்கலாம். ஓபிஎஸ், டிடிவி.தினகரன் குறித்து, அமித்ஷா கூறுகையில் அது அவர்கள் சொந்த உட்கட்சி பிரச்னை என கூறிவிட்டார். இதனால் எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். இவ்வாறு தெரிவித்தார்.
The post முந்தி பேசுனத கம்பிளீட்டா துடைச்சுடணும் அன்று- சைத்தான் கூட்டணி இன்று- பாஜ நல்ல கூட்டணி: அதிமுக உளறல் மன்னனின் புதுஉருட்டு appeared first on Dinakaran.
