×

தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் உள்ளது கூட்டணி குறித்து இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுப்போம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: அதிமுக-பாஜ கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக டிவியில் நானும் பார்த்தேன். தெரிந்து கொண்டேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதைப்பற்றி நாங்க எந்த கருத்தும் சொல்ல முடியாது. தேமுதிகவை பொறுத்தவரைக்கும் ஏப்ரல் 30ம் தேதி செயற்குழு-பொதுக்குழு நடத்த இருக்கிறோம். அதற்கான ஆலோசனைக்கூட்டம் இன்று (நேற்று) நடந்தது. அதற்காகத்தான் தேமுதிக நிர்வாகிகள் வந்துள்ளனர். தேமுதிகவின் கட்சி வளர்ச்சி, கட்சி பணிகளில் மட்டுமே முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறோம். செயற்குழு-பொதுக்குழு நடந்து முடிந்தவுடன் யாருக்கு எல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும்.

6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஒருவருட காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்த முறை மிகவும் யோசித்து, நிதானமாக தான் முடிவு எடுப்போம். பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருந்தோம். கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன். பாஜ மாநில தலைவர் மாற்றம் என்பது அக்கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தே.மு.திக. சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தலுக்கு இன்னும் ஒருவருடம் உள்ளது கூட்டணி குறித்து இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுப்போம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Temuthika ,General Secretary ,Premalatha ,Chennai ,Demutika Secretary General ,Coimpet, Chennai ,Atamug-Baja alliance ,
× RELATED இன்று அமாவாசை என்பதால் அதிமுகவில்...