×

அமெரிக்காவில் நடுரோட்டில் விழுந்து நொறுங்கிய விமானம்


போகா ரேடன்: அமெரிக்காவில் நடுரோட்டில் விமானம் விழுந்து நொறுங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் நேற்று காலை ஒரு சிறிய விமானம் திடீரென நடுரோட்டில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சாலை இருமாகாணங்களை இணைக்கும் அதி முக்கிய சாலை ஆகும். மேலும் ரயில் பாதை அருகே உள்ள சாலை ஆகும். விமானம் தீப்பற்றி எரிந்ததில் பெரும் புகை மூட்டம் எழுந்தது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், உயிர் பிழைத்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

The post அமெரிக்காவில் நடுரோட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் appeared first on Dinakaran.

Tags : America ,South Florida, America ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...