கம்பம், ஏப். 11: கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் அதிக அளவில் தென்னை, திராட்சை, மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் விளையக்கூடிய வாழை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாய மாவட்டமான தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராம அனுபவத் திட்டத்தின் கீழ் அப்பகுதி விவசாயிகளுக்கு பல்வேறு செயல்முறை விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியில் கிராம அனுபவத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் கேரளா வில்ட் மேலாண்மை குறித்து செயல் விளக்கத்தினை மதுரை வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவி ராலியா பேகம் அளித்தார். இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரு தென்னைக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் சூடோமோனாஸ், 50 கிராம் வேம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். இது போல் 6 மாத இடைவெளியில் ஆண்டிற்கு இருமுறை செய்தால் இந்நோயைக் கட்டுப்படுத்த இயலும் என விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
The post கம்பம் அருகே விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்முறை விளக்கப் பயிற்சி appeared first on Dinakaran.
