×

தபால் அனுப்பும் இயக்கம்

 

சிவகங்கை, ஏப். 11: தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது.சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மையம் சார்பில் மாவட்ட கலெ க்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி, நிதி காப்பாளர் நடராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மாநில செயலாளர் பாண்டி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு தபால் அனுப்பப்பட்டது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல, மானாமதுரை, காளையார்கோவில், சாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் கோரிக்கை தபால் அனுப்பி வைக்கப்பட்டது.

The post தபால் அனுப்பும் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Chief Minister of ,Tamil ,Nadu ,Tamil Nadu All Nutrition Anganwadi Pensioners Association ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்