கறம்பக்குடி, ஏப். 11: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே செங்கமேடு கிராமத்தில் குடுமியாண்மலை அரசு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாய களப்பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்கேமேடு கிராமத்தை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கு வேர் ஊட்டம் மற்றும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் மைதா கரைசல் பற்றி செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர்.
மேலும் தென்னையில் குரும்பை கொட்டுவதை தடுக்கவும் மற்றும் தேங்காய் அளவு மற்றும் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் தென்னை டானிகை பயன்படுத்தி வேர் ஊட்டம் பற்றி செயல் முறை விளக்க பயிற்சியை மாணவிகள் அளித்தனர். மேலும் தென்னையின் அடிமட்டையில் ரூக்கோஸ் மற்றும் வெள்ளை ஈக்களால் ஏற்படும் கரும்பூசணத்தை தடுக்க மைதா கரைசலை அடிமட்டையில் தெளித்து செயல்முறைவிளக்க பயிற்சி அளித்தனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் மாணவிகளிடம் விவசாயம் சம்மந்தமான தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இந்த விவசாய களப்பணியில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் செயல்முறை பயிற்சி appeared first on Dinakaran.
