×

திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: தனியார் பஸ் டிரைவர் வீட்டில் 10 சவரன் நகை, பணம் திருட்டு

 

திருக்கோவிலூர், ஏப். 11: திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் தனியார் பஸ் டிரைவர் வீட்டில் இருந்து 10 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் கிருஷ்ணமூர்த்தி (38). குடும்பத்துடன் வசித்து வரும் இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் பஸ் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி காலை கிருஷ்ணமூர்த்தி வேலைக்கு சென்றுள்ளார்.

அவரது மனைவி மற்றும் தாயார் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின்சார மீட்டர் பெட்டி அருகே வைத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுள்ளனர்.  பின்னர் இருவரும் வேலை முடிந்து மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து, கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள பீரோ திறந்து கிடந்ததோடு துணிமணிகள் சிதறி கிடந்துள்ளன.

பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். மேலும் விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post திருக்கோவிலூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்: தனியார் பஸ் டிரைவர் வீட்டில் 10 சவரன் நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Bhatapagal ,Thirukovilur ,Ap. ,Ayyanar ,Arunapuram village ,Vilupuram District Thirukovilur ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது