×

அலங்காநல்லூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்: எம்எல்ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார்

 

அலங்காநல்லூர், ஏப். 11: அலங்காநல்லூரில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை, வெங்கடேசன் எம்எல்ஏ திறந்து வைத்தார். அலங்காநல்லூர் கேட்டு கடை பஸ் நிலையம் பகுதியில், திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், தர்பூசணி ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, மாணவர் அணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பரந்தாமன். நகர் செயலாளர் ரகுபதி, ஒன்றிய துணை செயலாளர் அருண்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, அணி நிர்வாகிகள் தவசதீஷ், பிரதாப், யோகேஷ், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அலங்காநல்லூரில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்: எம்எல்ஏ வெங்கடேசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : DMK ,MLA Venkatesan ,Alanganallur ,Neermor Pandal ,Kettu Kadai Bus Stand ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை