இம்பால்: மணிப்பூரில் உள்ள 2 மாவட்டங்களில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில்,காக்சிங் மாவட்டம், மொய்ரங்கோம் மலை பகுதியில் உள்ள ஒரு இடத்தில் எந்திர துப்பாக்கிகள், ஸ்னைப்பர் ரைபிள், கண்ணிவெடிகள், கையெறிகுண்டுகள், வெடிமருந்துகள்,டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் யாரல்பட் பகுதியில் ஒரு பள்ளிக்கு எதிரே ஆயுதங்கள்,வெடிமருந்துகள் குவியல் மீட்கப்பட்டன. துப்பாக்கிகள், வெடிமருந்துகள், டெட்டனேட்டர்கள்,கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் போரோம் பேட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதற்கிடையே, இம்பால் மேற்கு மாவட்டம், லாம்சங் பஜாரில் தடை செய்யப்பட்ட பிடள்யுஜி அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
The post மணிப்பூரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்: தீவிரவாதி கைது appeared first on Dinakaran.
