திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 25ம் தேதி ரத சப்தமி நடக்க உள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் ஆர்ஜித சேவை, சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 24 முதல் 26ம் தேதி வரை திருப்பதியில் வழங்கப்படும் நேரஒதுக்கீடு சர்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
