டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சூர்யமூர்த்தி என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உரிமையியல் வழக்கு தொடுப்பதற்கு தனக்கு எந்த ஒரு தடையும் இல்லை என சூர்யமூர்த்தி வாதம் செய்தார். அதிமுக விதிகளின்படி பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சூர்யமூர்த்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது.
