×

சிறப்பாக செயல்படும் குழுக்கள் தகுதியானவை மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பெரம்பலூர், ஏப். 10: பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிராம ஊராட்சிப் பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கள பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மற்றும் நகர் புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர்ப்புற அளவிலான கூட்டமைப்புகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல் படும் குழுக்களுக்கு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதற்கு சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளது.

எனவே, சிறந்த முறையில் குழுக் கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறைமாற்றம், நிதி வரவு-செலவு, மேற் கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்புணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்றுத் திறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதியைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகரப்புற அளவிலான கூட்டமைப்புகள் இதற்கான விண்ணப்பங்களை தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் மற்றும் மாவட்டக்கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் இன்று (10ம் தேதி) முதல் 15ம் தேதி வரை நேரில் அளிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் வட்டார இயக்க மேலாளரை 63837 74958 என்ற எண்ணிலும், ஆலத்தூர் வட்டார இயக்க மேலாளரை 96599 35852 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டார இயக்க மேலாளரை 80987 39490 என்ற எண்ணிலும், வேப்பூர் வட்டார இயக்க மேலாளரை 88704 60112 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post சிறப்பாக செயல்படும் குழுக்கள் தகுதியானவை மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur District ,District ,Collector ,Grace Bachao ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...