- பங்குனி திருவிழாவில்
- கில்வேலூர்
- அஞ்சு வட்டத்தம்மம் கோவில் தேர்
- நாகப்பட்டினம்
- சுந்தர குஜாம்பிகை உடனுறை
- அட்சலிங்க சுவாமி
- கோவில்
- அஞ்சு
- வட்டத்தம்மம்
- பங்கூனி விழா
- வல்லங்குளம் மாரியம்மன் வீதி உலா
கீழ்வேளூர், ஏப். 10: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சலிங்க சுவாமி கோயில் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் 13 நாள் பங்குனி பெருவிழா மார்ச் மாதம் 30ம்தேதி இரவு வல்லான்குளத்து மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. 31ம் தேதி மணவாளன் அய்யனார் வீதி உலா நடைபெற்றது. கடந்த 1ம் தேதி அஞ்சு வட்டத்தம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் பூச்செரிதல் நிகழ்ச்சியும், அஞ்சு வட்டத்தமனுக்கு இருமுடி செலுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அஞ்சுட்டத்தம்மன் பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
நேற்று முந்தினம் இரவு அஞ்சுவட்டத்தம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்று நேற்று காலை அஞ்சுவட்டத்தம்மன் தேரோட்டம் நடைபெற்றது. வடக்கு வீதியில் உள்ள அஞ்சு வட்டத்தம்மன் தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் கீழவீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக மீண்டும் வடக்கு வீதியில் உள்ள தேரடிக்கு வந்து சேர்ந்தது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை முளைப்பாரி மற்றும் மாவிளக்கு நான்கு வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றும், நாளையும் (10, 11 தேதியில்) அஞ்சு வட்டத்தம்மன் உள் பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பூமிநாதன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் கிராமவாசிகள், உபயதாரர்கள், அஞ்சு வட்டத்தம்மன் பௌர்ணமி வழிபாட்டு மன்றத்தினர் செய்துள்ளனர்.
The post கீழ்வேளூரில் பங்குனி பெருவிழா; அஞ்சு வட்டத்தம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.
