×

அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூர், ஏப்.10: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் அரசனட்டி பகுதியில், அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம், பகுதி செயலாளர் மஞ்சுநாத் தலைமையில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினர். இதில், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி, பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், வட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Extraordinary Booth Committee ,Supreme Booth Committee ,Krishnagiri West District, Oshur Governorate ,Manjunath ,Western District ,Balakrishnareti ,Deputy Secretary ,Jayalalithaa Council ,Paneer Selvam ,Mutual Booth Committee ,Dinakaran ,
× RELATED சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்