×

வெயில் கொடுமை; மயங்கி விழுந்துஎஸ்எஸ்ஐ பலி

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பாலன் (54). இவர் நேற்று வேடசந்தூரில் நடந்த விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல இருந்தார். அதற்காக மாரம்பாடி பிரிவு அருகே கடுமையான வெயிலில் பாலன் சென்றபோது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக தனது டூவீலரை நிறுத்தி விட்டு நிழலில் ஒதுங்கி நின்றார். அப்போது அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தது உயிரிழந்தார்.

The post வெயில் கொடுமை; மயங்கி விழுந்துஎஸ்எஸ்ஐ பலி appeared first on Dinakaran.

Tags : Vedasandoor ,Balan ,Vedasandoor Traffic Police Station ,Dindigul District ,Marambadi Division ,Dinakaran ,
× RELATED வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி...