×

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது: முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நம்பிக்கையுடன் இருங்கள். மேற்கு வங்கத்தில் பிரித்து ஆட்சி செய்யக்கூடிய எதுவும் நடக்காது. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். அரசியல் இயக்கத்தை தொடங்குவதற்காக மக்களை தூண்டிவிடுபவர்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த மசோதா வன்முறை வேதனை அளிக்கிறது. மேற்கு வங்க எல்லைப் பகுதிகளில் நிலைமையை பாருங்கள். இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டு இருக்கக் கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத சிறுபான்மையினர் உள்ளனர். அவர்களை நான் என்ன செய்வேன்? மேற்கு வங்கம், வங்க தேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா அனைத்தும் ஒன்றாக இருந்தன என்று வரலாறு கூறுகின்றது.

பின்னர் பிரிவினை நடந்தது.இங்கு வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என் பணியாகும். நான் உங்களையும் உங்கள் சொத்துக்களையும் பாதுகாப்பேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டம் அமலாகாது” என்று தெரிவித்தார்.

The post மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது: முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Chief Minister ,Mamta Banerjee ,Kolkata ,Kolkata, West Bengal ,Mamta Banerjee Sikvatam ,
× RELATED டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்கை...