×

திருச்சி மாவட்டத்திற்கு ஏப்.15 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் ஏப்.15 உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 3ம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.

ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். வருகிற 14-ம் தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் ஏப்.15 உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 3ம் தேதி வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

The post திருச்சி மாவட்டத்திற்கு ஏப்.15 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : District Collector ,Trichy district ,Trichy ,Samayapuram Mariamman Temple Chithirai Ther festival ,Collector ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...