×

சட்டசபைக்கு 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க.வினர்


சென்னை: தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 14 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து, மார்ச் 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. அமைச்சர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். நேற்றைய தமிழக சட்டசபை நிகழ்வின்போது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

மேலும் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்தனர். இது குறித்து அதிமுக எம்எல்ஏ கூறுகையில் “சபாநாயகர் அப்பாவு பேச அனுமதிப்பதில்லை. அதை கண்டிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்தோம். மேலும் பிரதான எதிர்க்கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.

The post சட்டசபைக்கு 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து வந்த அ.தி.மு.க.வினர் appeared first on Dinakaran.

Tags : . M. K. ,Chennai ,Tamil Assembly ,. M. K. Winner ,
× RELATED ‘‘என்னை ஏன் வம்புக்கு...