×

ஒல்லினா முருங்கை… குண்டுனா பூசணி… பெண்களை குறித்து மேலும் ஒரு அதிமுக மாஜி அமைச்சர் சர்ச்சை

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகிகளை பார்த்து ‘ஒல்லியாக இருப்பது முருங்கைக்காய்…. குண்டாக இருப்பது பூசணிக்காய்’… என செய்கை மூலம் காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒருமையில் பேசினார். மாஜி அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெண் நிர்வாகிகள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாராதான் வேணும் என்று தன் கனவை சொன்னார். ஒன்னொரு மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சேலை தர்றாங்க…பொம்ளைங்க பாவடை கேட்குறாங்க என்று ஆபாசமாக பேசினார். தற்போது, மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரும் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசி உள்ளதற்கு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

Tags : OLLINA MURUNGA ,KUNTUNA ,Atamuka ,Coalition party ,Karur ,Chief Post Office ,National Democratic Alliance ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!! அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்