×

கிருஷ்ணகிரி அருகே விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானைகள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட காவேரி வடக்கு வனவிலங்கு சரணாலயத்தில் 50க்கும் மேற்பட்ட யானைகள் இருந்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் வனத்திலிருந்து வெளியேறி அருகிலிருக்கும் விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன.

இதன் காரணமாக வேதனை அடைந்த விவசாயிகள் யானைகளை விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி 27 யானைகளை இரவு 2 மணியளவில் விரட்டி சென்றனர். அப்போது பனைக்காடு என்ற பகுதியில் விவசாயிக்கு சொந்தமான தடுப்புச்சுவர் அமைக்காத 15 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் யானையும், ஒரு குட்டி யானையும் விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த ஜவளகிரி வனச்சரகர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பொக்லைன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் இருந்து யானைகளை மீட்டனர். இதையடுத்து யானைகள் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

The post கிருஷ்ணகிரி அருகே விவசாய கிணற்றில் விழுந்த காட்டு யானைகள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Cauvery North Wildlife Sanctuary ,Tenkanikottai forest reserve ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...