×

மங்கலம் கிராமத்தில் தையல்நாயகி அம்மன் கோயில் தேர்திருவிழா

குன்னம், ஏப். 9: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மங்கலம் கிராமத்தில் மருதையான், கருப்பையா, முத்தையா, திருநாவுக்கரத்தான், தையல்நாயகி அம்மன் ஆலயம் உள்ளது. இதில் கடந்த 5ம் தேதி சுவாமிகள் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் 6ம் தேதி மாவிளக்கு பூஜையும், இரவு வாண வேடிக்கையுடன் புஷ்ப அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தேர் திருவிழா மேளதாளம், வாணவேடிக்கையுடன் நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழு த்தனர். தேர் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தன. தேர் விழாவில் மங்கலம் கிராம பொதுமக்கள் மற்றும் ரஞ்சன்குடி வாலிகண்டபுரம், எறையூர் உள்ளிட்ட கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post மங்கலம் கிராமத்தில் தையல்நாயகி அம்மன் கோயில் தேர்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Ceremony ,Tayalnayagi ,Amman Temple ,Mangalam Village Kunnam ,Mangalam ,Veppanthata ,Perambalur district ,Marudaiaan ,Arupaiya ,Muttiah ,Thirunavukarthan ,Tayalnayagi Amman ,Swamikal Thiruviti walk ,Thailnayagi Amman Temple Election Ceremony in ,Mangalam Village ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்