- சுவாமி
- அம்பாள்
- திருக்கல்யாணம்
- Kumbabhishekam
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்
- தென்காசி
- சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம்
- தென்காசி உலகம்மன் உடனுறை காசி
- விஸ்வநாதர்
- கோவில்
- அஷ்டபந்தனம்
- அம்பாள் திருக்கல்யாண வைபவம்
- தென்காசி காசி
தென்காசி, ஏப்.9: தென்காசி உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு மாலையில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், அங்குரார்ப்பனம், சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்து திருமாங்கல்ய தாரணமும் மாலை மாற்றும் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து விசேட சோடச தீபாராதனை சேவையும் சிறப்பாக நடந்தது.
அதன் பின்னர் விநாயகர், சுவாமி, அம்பாள், பராக்கிரம பாண்டியர் ஸஹிதம் திருவீதி உலாவும் சிறப்பு மேளதாளங்கள் முழங்க நடந்தது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், ஷீலா குமார், புவிதா, மூக்கன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
The post தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் appeared first on Dinakaran.
