×

உசிலம்பட்டி குறைதீர் கூட்டத்தில் வட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம்

உசிலம்பட்டி, ஏப். 9: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி 58 கால்வாய் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றியம், பள்ளிக்கல்வித்துறை, தேசிய நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும், வங்கி நிர்வாகத்தினர் உள்ளிட்ட அலுவலர்கள் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வாராததைக் கண்டித்து விவசாயிகள் வட்டாட்சியருடன் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு இரண்டு முறை கடிதம் வாயிலாக பதிவு செய்துள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்தார். மேலும் உசிலம்பட்டி நகர் பகுதியில் பட்டாசு வெடிப்பதை தடுக்க காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

The post உசிலம்பட்டி குறைதீர் கூட்டத்தில் வட்டாட்சியருடன் விவசாயிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Usilampatti ,Madurai district ,Tahsildar Balakrishnan ,Usilampatti 58 Canal Association ,Tamil Nadu Farmers’ Protection Association ,Nanjai ,Dinakaran ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை