×

அரக்கோணம் உட்கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

*எஸ்பி சான்றிதழ் வழங்கினார்

பாணாவரம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், எஸ்பி விவேகானந்த சுக்லா கலந்து கொண்டு போக்சோ வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு தொடர் தண்டனை பெற்று தந்த அரக்கோணம் உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய நீதிமன்ற பெண் காவலர் மாலதி, போக்சோ வழக்குகள், வெளி வராத வழக்குகளை நீதிமன்ற விசாரணைக்கு எடுத்தது, நீதிமன்ற விசாரணை கோப்புகளில் சிறப்பாக பணியாற்றிய அவலூர் சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக எடுக்கப்படும் துரித நடவடிக்கைகளுக்காக அரக்கோணம் சிறப்பு தனிப்படையை சேர்ந்த பாணாவரம் சப்- இன்ஸ்பெக்டர் முனீர்பாஷா மற்றும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். அப்போது, அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர்சித்திக் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post அரக்கோணம் உட்கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Arakkonam Sub-District ,SP ,Panavaram ,Ranipet district ,Vivekananda Shukla ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...